காதலர் தினத்தை முட்டாள் தினமாக்கிய ரைசா.. வாழ்த்து சொன்ன ஸ்டார்கள் கடுப்பு..
பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தவர் ரைஸா. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஹரிஷ் கல்யாணை ரைசா காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஹரிஷ் விலகிச் சென்றார்.
விடாப்பிடியாக ஹரிஷுக்கு காதல் வலை விரிக்கும் வகையில் ஹரிஷ் உடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக இணைய தளத்தில் ஆசையை வெளியிட்டார் ரைசா. அதற்கும் ஹரிஷ் அசைந்து கொடுக்கவில்லை. இதில் ஏமாற்றம் அடைந்த ரைசா புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலனை அறிமுகப்படுத்தப்போகிறேன் என்று இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பகிர்ந்தார். இதையறிந்து அவரது ரசிகர்கள், தோழிகள், நண்பர்கள் அட்வான்ஸ் வாழ்த்து கூறியதுடன் ரைசாவின் காதலனை காண ஆவலாக காத்திருந்தனர். சொன்னபடி காதலர் தினத்தன்று வால்டர் பிலிப்ஸ் என்பவரை ரைசா அறிமுகம் செய்துவைத்து இவர்தான் என்னுடைய காதலர் என்றார். வால்டரும் ரைசாவிடம் காதலை பகிர்ந்தார். ஆனால் அதன்பிறகுதான் ரைசா அனைவரையும் முட்டாள் ஆக்கிய விஷயம் தெரியவந்தது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் ஹேஷ்டேக் லவ் என்ற படத்தில் வால்டர் உடன் ரைசா இணைந்து நடிக்கிறார்.பாஸ்கோ பிரபு இயக்குகிறார். அந்த அறிவிப்பைதான் இப்படி ஏமாற்றி அறிவித்தாராம். இதையறிந்து அவருக்கு முன்கூட்டியே வாழ்த்து சொன்ன ரசிகர்களும், ஓவியா உள்ளிட்ட தோழிகளும் ரைசாவை கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக் கின்றனர்.