ஷங்கர்-விஜய் மீண்டும் இணைய வாய்ப்பு.. நண்பன் படத்திற்கு பின் மற்றொரு அதிரடி..
எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷங்கர். பின்னர் இயக்குனராகி பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் பெற்றார். காதலன், ஜென்டில்மேன், அந்நியன், சிவாஜி, இந்தியன், 2.0 பெரும்பட்ஜெட் படங்களையும் ரஜினி, கமல், விக்ரம், விஜய் போன்றவர்களையும் இயக்கி தனக்கென ஒரு இமேஜை உருவாக்கினார்.
ஷங்கர் படம் என்றாலோ பிரமாண்ட செலவில் எடுக்கும் படம் என்ற முத்திரையிருப்பதால் அவரும் குறைந்த பட்ஜெட் படங்களை இயக்குவதில்லை. தற்போது இந்தியன் 2ம் பாகம் இயக்கி வருகிறார். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இப்படம் முதல்வன் 2ம் பக்கமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் கேட்டபோது,'மீண்டும் புதிய படத்தில் இணைய நானும் ரெடி விஜய் ரெடி. எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்பு ஏற்படும்' என குறிப்பிட்டார்.