நயனுக்காக வெயிட் குறைக்கும் சேதுபதி.. சமந்தாவும் ஜோடிபோடுவதால் உற்சாகம்..
சங்கத்தமிழன் போன்ற சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த சில படங்களில் அவரது உடல் எடை கூடியிருந்தது பற்றி திரையலகில் பேச்சு எழுந்தது. சரியான உடற்கட்டுடன் நடித்து வந்தவர் திடீரென்று உடல் எடை கூடியது பற்றி பலரும் அவரிடம் சுட்டிக்காட்டினார்கள். அவரும் அப்படியா என்று கேட்டுக்கொண்டு கவனத்தில் எடுத்துக்கொண்டோர். அதற்கேற்ப நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.
ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் அவருடன் நடித்திருந்தார் விஜய்சேதுபதி அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அதே கூட்டணிதான் மீண்டும் புதிய படத்தில் இணைகிறது. இப்படத்துக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக விஜய்சேதுபதியை உடல் எடையை 5 கிலோ அளவுக்கு குறைக்க கேட்டிருக்கிறார் இயக்குனர். கூடுதல் இணைப்பாக இப்படத்தில் சமந்தாவும் நடிக்கவிருக்கிறார்.
நயன்தாரா, சமந்தா இருவருமே ஸ்லிம் தோற்றத்தை பராமரிப்பதால் அவர்களுக்கு ஜோடிபோடும் விஜய்சேது பதியும் வெயிட்டை குறைத்து ஒல்லியாகி இளமை தோற்றத்தில் நடிக்க வைக்க விக்னேஷ் திட்டமிட்டிருக்கிறாராம்.