கமல் பட ஷூட்டிகை பாதித்த கொரோனா வைரஸ்.. வெளிநாடு படப்பிடிப்பில் சிக்கல்..

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பு இடைவெளிக்கு பிறகு தொடங்கி நடந்து வருகிறது.

கமலின் சிஷ்யையாக மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகள் கற்றவராக நடிக்கிறார் காஜல் அகர்வால். சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, வித்யூத்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை, ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் கமல், காஜல் அகர்வால் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளது. சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட நிலையில் தற்போது அதற்கு தடங்கள் ஏற்பட்டிருக்கிறது. சீனா, தாய்லாந்து இரு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. அந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது முடியாத காரியம் என்ற நிலை உருவாகியிருப்பதால் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக விரைவில் இந்தியன் 2 படக்குழு ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது.

சீனாவில் படமாக்கப்படவிருந்த காட்சிகளை ஆஸ்திரேலியாவில் படமாக்குகின்றனர். அதேபோல் தாய்லாந்தில் படமாகவிருந்த காட்சிகளை இலங்கையில் படமாக்க உள்ளார்களாம்.

More News >>