செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36!
நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்துத் திரைக்கு வரும் திரைப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தின் சூர்யா தனது 36 வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து தற்போது 'சூர்யா 36' எனக் குறிப்பிடப்படம் இத்திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற மார்ச் 5-ம் தேதி 'சூர்யா 36' திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
'சூர்யா 36' திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் ரகுல் ப்ரீத் சிங், மற்றும் சாய் பல்லவி உள்ளனர். டிரீம் வாரியர்ஸ் இத்திரைப்படத்தை இயக்குகிறது. யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். செல்வராகவனின் 'கான்' திரைப்படத்தையே மெருகேற்றி 'சூர்யா 36' ஆக வழங்கவுள்ளார் செல்வா எனக் கூறப்பட்டாலும் படத்தின் திரைக்கதை ரகசியமாகவே உள்ளது.
செல்வராகவனின் திரைப்படத்துக்குப் பின்னர் சூர்யா தனது அடுத்தப் படத்துக்காக கே.வி.ஆனந்த் உடன் இணைய உள்ளார். இந்தப் பட வேலைகள் மே மாதம் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கடுத்து 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காரா உடன் ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யா தனது 38-வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஜி.வி. வெளியிட்டுள்ளார்.