உத்தரப்பிரதேசத்தில் புதிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. 3000 டன் தேறுமாம்

உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கத்தின் மூலம் 3 ஆயிரம் டன் தங்கம் கிடைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் மண்ணுக்கடியில் தங்கப்படிமானங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அங்குச் சுரங்கம் அமைப்பது குறித்துக் கடந்த 1992-93ம் ஆண்டு முதல் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகாடி, ஹர்டி ஆகிய இடங்களில் சுரங்கங்கள் அமைத்து தங்கம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தியப் புவியியல் ஆய்வு துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய சுரங்கங்களில் சுமார் 3 ஆயிரம் டன் வரை தங்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே செயல்படும் தங்கச் சுரங்கங்களில் 626 டன் அளவுக்குத் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதைப் போல் 5 மடங்கு தங்கம் தோண்டி எடுப்பதற்கான புதிய சுரங்கங்கள் அமையவுள்ளது. 3 ஆயிரம் டன் என்பது சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த சுரங்கங்களுக்கு ஏலம் விடும் பணி தொடங்கியுள்ளது என்றனர். உ.பி. துணை முதல்வர் மவுரியா கூறுகையில், புதிய தங்கச் சுரங்கம் அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இந்தியாவின் நிதியை அதிகரிக்க உதவும் என்றார்.  

More News >>