ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை புகார்.. போலீசார் வழக்குப் பதிவு..
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் பல்வேறு தெலுங்கு நடிகர்கள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அவிழ்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.
ஐதராபாத்திலிருந்த ஸ்ரீரெட்டி பின்னர் சென்னைக்கு வந்து செட்டிலானார். அப்போதும் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் பிரபலங்கள் மீது புகார்களை அள்ளி வீசினார். நடிகர் பவன் கல்யாண் போன்ற ஒரு சில நடிகர்கள் மீது மீண்டும் மீண்டும் புகார் கூறிவருகிறார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பாணியில் இதுவரை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் போலீசார் தீவிரம் காட்டாமல் இருந்தனர், இதற்கிடையில் தெலுங்கு படத் துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குநர் ராகேஷ் இருவரும் ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஸ்ரீரெட்டி தங்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் காண்பித்து புகார் கொடுத்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் ஸ்ரீ ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.