ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி ஹேஷ்டாக்.. ரஜினியை நையப் புடைக்கும் நெட்டிசன்கள்..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த வருடம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ரஜினி, எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் நாடு சூடு காடாகி விடும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை ஆணையம், அவர் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்று பிப்ரவரி 25ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கச் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகினால் ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதாகவும் எழுத்து மூலமாக பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனை அவரது எதிர்ப்பாளர்கள் டிவிட்டர் பக்கத்தில் #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஷ்டாக் உருவாக்கி நையாண்டி செய்து ட்ரெண்ட் ஆக்கி உள்ளனர்.