ஹீரோயின் லக்கேஜை மாற்றிய விமான ஊழியர்.. நிர்வாகிகளிடம் தகராறு..
இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கிரித்தி கர்பான்டா நடித்த படம் புருஸ்லி. சமீபத்தில் இவர் ஏர் இந்திய விமானம் மூலம் மும்பையிலிருந்து கோவாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்த பிறகு தனது லக்கேஜை அனுப்பி வைக்கக் கேட்டார் கிரித்தி. ஆனால் அவரது லக்கேஜுக்கு பதிலாக வேறுவொருவரின் லகேஜை கிரித்தியிடம் கொடுத்தனர். அதை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தவர் ஊழியர்களிடம் தகராறு செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிரித்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மெசேஜில் விமான நிறுவனம் மீது தனது எரிச்சலைக் கோபமாக வெளியிட்டார். இந்த விவரம் அதிகாரிகள் கவனத்துக்கு வந்ததும் கிரித்தியை தொடர்கொண்டு உங்கள் பொருள் பத்திரமாகக் கோவாவில் இருக்கிறது என்று கிரித்தியிடம் கூறினார்கள். ஆனால் கிரித்தி இதற்கெல்லாம் அசைந்துகொடுக்காமல் 'ஊழியர்களின் போக்கு இப்படியே போனால் உங்கள் வர்த்தகம் பாதிக்கும். இதையடுத்து நிர்வாகத்தினர் கிரித்தியிடம் மன்னிப்பு கேட்டனர். அதை ஏற்றுக்கொண்டபோதிலும் உங்கள் வாடிக்கையாளர்களிடம் பயணிகளிடம் நிதானமாகவும் மரியாதையும் நடக்கக் கற்றுத்தாருங்கள்' என்றார் கிரித்தி கர்பன்டா