பிரியா பவானி சங்கருக்கு மீம்ஸ் போட்ட இயக்குநர்..
மான்ஸ்டர் படத்தில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். அடுத்து குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை 8தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார்.
ஸ்ரீ கணேஷ் தனது படம் பற்றித் தானே மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது படக் கதாநாயகி பிரியா பவானியை ஷாக் ஆக்கும் வகையில் ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்.
அதாவது எனக்காக ஒரு மீம்ஸ் போடுங்கள் என்று தன்னை மிரட்டியதாக மீம் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதுவும் ரஜினி நடித்த பாட்ஷா படத்தை வைத்து இந்த மீம்ஸ் பதிவிட்டிருக்கிறார்.