அண்ணாத்தே ஆனார் ரஜினி.. 168வது பட டைட்டில் அறிவிப்பு..
ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தைச் சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார்.
இப்படத்துக்குப் பெயர் வைக்கப்படாமல் படப்பிடிப்பு தொடங்கியது. சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. படத்துக்கு என்ன பெயர் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில் அண்ணாத்தே, மன்னவன் என இரண்டு பெயர்களில் ஒரு பெயர் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வமாக 'அண்ணாத்தே' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தைத் தீபாவளிக்கு முன்பே வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.ரஜினியின் புது பட டைட்டில் அண்ணாத்தே என்று அறிவிக்கப்பட்டவுடன் ரசிகர்கள் அதை நெட்டில் ட்ரெண்டாகி வருகின்றனர்.