சிம்பு, விஜய்சேதுபதி மீண்டும் இணைகின்றனர்.. சேரன் இயக்கும் பெரிய பட்ஜெட் படம்..
இயக்குநர் சேரன், நடிகராகவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று சேரனுக்கு விஜய்சேதுபதி அழுத்தம் கொடுத்திருந்தார். அதையேற்று சேரன் பங்கேற்றார். அப்போதே இருவரும் புதிய படத்தில் இணைவதுபற்றி பேசினார்கள். சேரன் இயக்கும் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் படம் எப்போது தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.
தற்போது அதற்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார் சேரன். படத்துக்கான ஸ்கிரிபட் ரெடி செய்திருக்கும் சேரன் மற்றொரு முக்கிய கதாபாத்திரமும் படத்தில் இடம்பெறுவதால் அதில் சிம்புவை நடிக்க வைக்க எண்ணி உள்ளார். அவருக்கும் கதை பிடித்து நடிக்கச் சம்மதம் தெரிவித்தால் விஜய்சேதுபதி, சிம்பு இணையும் 2வது படமாக இருக்கும். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் சேரன் படத்தில் விஜய் சேதுபதி மட்டும் நடிப்பதாக இருந்தது தற்போது ஸ்கிரிப்ட்டில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் இடம்பெறுவது. கதைக்குக் கூடுதல் பலம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பாத்திரத்தில் சிம்புவை நடிக்கக் கேட்க உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு ஹீரோக்கள் இணைவதால் இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகத் தயாராகிறது.