ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மகன் என்ட்ரி.. ஹீரோவாக அறிமுகமாகிறார்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அட்லி இயக்கிய பிகில் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இதையடுத்து ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியிருப்பதாக பட தரப்பு அறிவித்தாலும் ஒரு சில விநியோகஸ்தரர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகப் போர்க்கொடி உயர்த்தினர். இந்நிலையில் விஜய்யைச் சந்தித்த முருகதாஸ் தனது படத்தில் சஞ்சய்யை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறினார்.
அதைக்கேட்ட விஜய் இதுபற்றி சஞ்சயிடமே நேரடியாகப் பேசுங்கள். சினிமாவில் நடிப்பதா இல்லையா? என்பதை அவரே முடிவெடுப்பார் என்றார். சஞ்சய்யை பொறுத்தவரை ஏற்கனவே 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சி ஒன்றில் நடித்திருந்தார். அதேபோல் விஜய் மகள் திவ்யா ஷாஷா விஜய் நடித்த தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.