விந்து தானம் தருபவராக இளம் நடிகர்.. டிரெய்லர் வெளியீடு..
சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான படம் விக்கி டோனர். அயூஷ்மான் கல்யாண், யாமி கவுதம் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் தாராள பிரபு பெயரில் ரீமேக் ஆகிறது. ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். தான்யா ஹீரோயின். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.
தாராள பிரபு படத்தின் டீசர் இதற்கு முன்பே வெளியிடப்பட்ட நிலையில் இப்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. தமிழுக்கு இது முற்றிலும் புதிய கதைக்களமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் ஸ்பெர்ம் டோனர் (விந்து தானம்) செய்பவர்கள் மூலமாக விந்துகள் பெற்று குழந்தை பெறுவார்கள் உண்டு. அதன் அடிப்படையில் இக்கதை. அமைக்கப்பட்டுள்ளது. பெண் டாக்டர் ஒருவரின் வற்புறுத்தலால் விந்து தானம் செய்பவராக நடிக்கிறார் ஹரிஷ் கல்யாண். அதனால் வரும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் படம் விளக்குகிறது.
இப்படத்திற்காக அனிரூத் ரவிசந்தர், பரத் சங்கர், மேட்லி பூளுஸ், ஊர்கா தி பேண்ட், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, , ஷேன் ரோல்டன் மற்றும் விவேக்-மெர்வீன் ஆகிய 8 இசையமைப்பாளர்கள் முதன்முறையாக இசை அமைக்கின்றனர். இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியானது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. வரும் மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. தமிழுக்கு ஏற்ப காட்சிகள் மாற்றப்பட்டிருக்கிறதாம்.