நடிகை தற்கொலை பற்றிப் பரபரப்புக்காகச் செய்தி வெளியிடுவதா? லண்டன் டிவிக்கு எமி ஜாக்சன் கண்டனம்..
நடிகை எமி ஜாக்சன், காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட் டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது லண்டனில் வசித்து வரும் எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். எமி, ஆன்ட்ரியாஸ் திருமணம் நடக்கும் தேதி பற்றி இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில் லண்டன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் கரோலின் பிளாக்.
திடீரென்று சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கரோலின் மரணம் குறித்து லண்டன் இதழ்களும், டிவி சேனல்களும் பரபரப்பான தகவல்களை போட்டிப்போட்டு வெளியிட்டு வருகின்றன. இதனால் கரோலின் குடும்பத்தினர் கவலை அடைந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தி எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தொடர்ந்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
'குடும்பத்தினர் கேட்டுக்கொண்ட பிறகும் அதுபற்றி கவலைப் படாமல் பரபரப்பாகச் செய்தி களை வெளியிடும் லண்டன் டிவி, பத்திரிகைகளுக்கு நடிகை எமி ஜாக்சன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கரோலின் இழப்பால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தாமல் கரோலின் பற்றிப் பரபரப்புக்காகச் செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்' எனக் கூறி உள்ளார் எமி ஜாக்சன்.