திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மரணம்..
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான கே.பி.பி.சாமி இன்று(பிப்.27) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 57.
சென்னை திருவொற்றியூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி. சாமி கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். இன்று(பிப்.27) காலையில் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார்.
வடசென்னை திமுகவில் முக்கியப் பிரமுகராகத் திகழ்ந்த கே.பி.பி.சாமி, அக்கட்சியின் மாநில மீனவர் அணி செயலாளராகப் பதவி வகித்தவர். கடந்த 2006-2011ல் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.