சம்பளமில்லாமல் டிரைவராக வேலை செய்யும் நகுல்..
நடிகை தேவயாணியின் தம்பி நடிகர் நகுல். இவரை பாய்ஸ் படத்தில் இயக்குநர் ஷங்கர் அறிமுகப்படுத்தினார். அதில் குண்டு பையனாக நடித்திருந்த நகுல் ஒரு கட்டத்தில் உடல் எடையைக் குறைத்து ஹீரோவுக்கான ஸ்லிம் தோற்றத்துக்கு மாறினார்.
காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்கள் அவருக்கு ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தித் தந்தது. என்ன காரணத்தாலோ அவருக்குத் தொடர்ச்சியாகப் படங்கள் வரவில்லை. ஆடிக்கொன்று அமாவாசைக்கொன்று என நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் உற்சாகம் குறையாமலிருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகிறார். இவரும் ஒரு நல்ல டான்ஸர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் தோற்றத்தில் மனைவியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ள நகுல், ' மனைவிக்காக டிரைவராகி விட்டேன், சம்பளம் கிடையாது, சாப்பாடு இல்லை, நல்ல டிரஸ் இல்லை. இது அடிமைத்தனம், மோசமான பாஸ், நம்புங்க' என ஜாலியாக மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அனுதாபமும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.