ஓரின சேர்க்கை படத்துக்கு ஆதரவாக குஷ்பு.. நெட்டிஸனுக்களுக்கு நடிகை பதில் கேள்வி..
சமீபத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேட்டி அளித்திருந்தார் நடிகை குஷ்பு. அரசியல் பக்கம் கவனம் செலுத்தும் அதே வேளையில் சினிமா பக்கமும் தனது கவனத்தை வைத்திருக்கிறார்.
அதிகளவில் படங்களில் நடிக்காவிட்டாலும் கணவர் சுந்தர்.சியுடன் இணைந்து படங்கள் தயாரிக்கிறார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ஓரினச் சேர்க்கையை ஆதரவாக 'சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தன்' என்ற இந்தி படம் வெளியானது. அதற்குப் பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் குஷ்பு.
குஷ்புவின் இந்த ஆதரவு மெசேஜுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்குப் பதில் அளித்தவர் 'ஓரினச் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றமே ஆதரவு அளித்து உள்ளது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையை ஆதரித்து வெளியான திரைப்படத்தைப் பாராட்டுவதில் என்ன தவறு உள்ளது.' எனப் பதில் கேள்வி எழுப்பி உள்ளார் குஷ்பு.