பியர் கிரில்சுடன் ரஜினியின் வன சாகச பயணம்.. வரும் மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பு..
டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற பெயரில் பியர் கிரில்ஸ் சாகச நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. வனப்பகுதிகளில் தனியாகச் சிக்கிக்கொண்டால் உயிர் வாழ்வது எப்படி என்பது போன்ற நிகழ்ச்சிகளை நேராகச் செய்து காட்டுவார்.
கடந்த ஜனவரி மாதம் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் மைசூரில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் சென்று சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார். சென்னையிலிருந்து காலையில் விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த் வனப்பகுதியை அடைந்து பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் சென்றார். பியர் கிரில்ஸ் அப்பகுதியில் காட்சிகளைப் படமாக்கினார். ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று டிஸ்கவரி சேனல் தெரிவித்துள்ளது.