விக்ரமின் கோப்ரா பர்ஸ்ட் லுக்.. நாளை வெளியாகிறது..
அஜய்ஞானமுத்து இயக்கத்தில் 'விக்ரம் 58' வது படமாக உருவாகிறது கோப்ரா.
அஜய்ஞானமுத்து டைரக்டு செய்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான்பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.
கோப்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர உள்ளது.