ஸ்ருதிக்கு முகம், மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி.. அவரே வெளியிட்ட தகவல்..
சூர்யாவுடன் 7ம் அறிவு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து விஜய்யுடன் புலி, விஷாலுடன் பூஜை என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் மீண்டும் நடித்த ஸ்ருதி இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் அப்படத்திலிருந்து வெளியேறினார். அதன்பிறகு கடந்த 2 வருடமாக நடிக்காமல் ஒதுங்கியிருந்தவர். காதலனுடன் டேட்டிங், வெளிநாட்டு மேடைகளில் பாப் பாடகி என சுற்றி வந்தார். சமீபத்தில், 'லாபம்' என்ற படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் திடீரென்று முக அழகு சிகிச்சை செய்துக்கொண் டார். இதற்காக முகம் மற்றும் மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜெரி செய்துகொண்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,'பெரும்பாலும் என் ஹார்மோன் களின் மாற்றங்களுக்கு ஏற்பவே நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இருக்கிறேன். இது எளிதானது அல்ல. உடல் மாற்றங்களும் எளிதானது அல்ல. எனது வாழ்க்கை பயணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு எளிதானது. எனக்கு முகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதா என்கிறார்கள். ஆம், எனக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படவில்லை' என்றார்.