ஹஜ் அசோசியேஷன் அபுபக்கர் ரஜினியுடன் திடீர் சந்திப்பு..

இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் இன்று நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்து பேசினார்.

இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் இன்று காலை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு வந்தார். அங்கு ரஜினிகாந்த்தைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் ரஜினிக்கு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் போராட்டம், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும் இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

சந்திப்புக்குப் பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அபுபக்கர், மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்துப் பேசினேன். நாட்டில் நிலவும் சூழ்நிலைகள், பல்வேறு பிரச்சினைகள், மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்துப் பேசினேன். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள்தான் என்றார்.

More News >>