டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் பற்றி வதந்தி.. பரப்பியது யார் தெரியுமா?
1980களில் பயணங்கள் முடிவதில்லை என்ற படத்துடன் இயக்குநராக என்டரியான ஆர்.சுந்தர்ராஜன் அந்த ராத்திரிக்குச் சாட்சி இல்லை, சரணாலயம், குங்கும சிமிழ் போன்ற பல படங்களை இயக்கினார். ரஜினி நடித்த ராஜாதி ராஜா என்ற சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கி அளித்தார். கடைசியாக சித்திரையில் நிலாச்சோறு படத்தை இயக்கினார். பின்னர் நடிகராகிவிட்டார். பரதன், பட்டத்து ராணி, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக இன்று காலை கோலிவுட் முழுவதும் வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் அவரை செல்போனில் அழைத்தனர் . அதில் அவரே பேசினார். தொடர்ச்சியாக போன்கள் வரவே ஷாக் ஆனார் சுந்தர்ராஜன். பின்னர் வந்த அழைப்புகளை சுந்தர்ராஜன் மகன் தீபக் அட்டன்ட் செய்து வதந்திபற்றி விளக்கிப் புரிய வைத்தார். பிறகு பேஸ்புக்கில் அளித்த விளக்கத்தில், 'என்னுடைய தந்தை சுந்தர்ராஜன் நலமாகத்தான் உள்ளார். அவர் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். என் தந்தை குறித்து வரும் வதந்திகளைப் பரப்பாதீர்கள். அவருக்கு உடல் நிலை பிரச்சினை எதுவும் கிடையாது. ஆரோக்கியமாக உள்ளார்' எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.சுந்தராஜன் பற்றி வதந்தி பரவியதுபற்றி ஏன் என்பது தெரியவந்தது. ரஜினி ரசிகர் ஒருவர்தான் இந்த வதந்தியைக் கிளப்பி விட்டாராம். ஏற்கனவே ஒரு மேடையில் பேசிய சுந்தர்ராஜன்' ரஜினி உடல்நிலை குறித்து தவறாகப் பேசினாராம். அதற்குப் பதிலடி தரவே ரஜினி ரசிகர்கள் சுந்தர்ராஜன் பற்றி கிசுகிசு பரப்பியதாகக் கூறப்படுகிறது.