கேப்ராவில் 11 வேடத்தில் விக்ரம்.. 7 கெட்டப் வெளியீடு..
விக்ரம் நடிக்கும் புதிய படம் கோப்ரா. டிமான்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்துக்காக விக்ரம் நீண்ட முடி வளர்த்திருக்கிறார். நீண்ட சிகை அலங்காரத்துடன் கோப்ரா படத்திலும் நடிக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் இருபாம்புகள் இருக்கும் விதமாக வெளியிட்டபோது பரபரப்பானது. அதேபோல் விக்ரம் தோளில் மலைப்பாம்பு இருப்பதுபோல ஸ்டில்கள் வெளியாகின. ஆனால் படத்தில் அவரது தோற்றம் எப்படியிருக்கும் என்பதை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் இயக்குநரிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விக்ரம் பர்ட்ஸ் லுக் என்ற பெயரில் வெவ்வேறு தோற்றங்களில் 7 ஸ்டில்கள் வெளியிடப் பட்டது. அதைக்கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஒன்று கேட்டால் ஏழு வெரைட்டியா என்று வியப்பு மேலிட வாழ்த்து மெசேஜ் பகிர்ந்தனர்.
இப்படம் பற்றி இயக்குநர் அஜய் ஞானத்துக் கூறியது: விக்ரம் இதுவரை ஏற்று நடிக்காத வேடமாக இப்படத்தில் முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பீரிட்டீஸ்காரர், சீன முதியவர், ரஷ்ய நபர், பாதிரியார், அரசியல்வாதி உள்ளிட்ட 7 தோற்றங்களில் நடிக்கிறார். படத்தில் மொத்தம் எத்தனை வேடங்களில் நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ்' என்றார்.
இப்படத்தில் விக்ரம் 11 தோற்றங்களில் நடிக்க உள்ள தாக ஒரு தகவல் கசிந்திருக்கிறது. தற்போது 7 தோற்றங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மேலும் 4 தோற்றங்கள் படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.