கார்த்தி நடித்த கைதி இந்தியில் ரீமேக் ஆகிறது.. பிரபல நடிகர் நடிக்கிறார்..
கடந்த வருடம் தீபாவளி தினத்தையொட்டி விஜய்யின் பிகில், கார்த்தி நடித்த கைதி என இரண்டு படங்கள் போட்டியாக வெளியாகின.
இரண்டு படங்களும் போட்டிப்போட்டு ஓடியது. ஒரு சில இடங்களில் பிகில் படத்தைவிடக் கைதி படம் வசூல் எகிறியது. இது திரையுலகினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கைதி படத்தை இயக்கிய லோகேஷ்கனகராஜ் தனது அடுத்த படமாக விஜய்யை ஹீரோவாக வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். பரபரப்பாகப் பேசப்பட்ட கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. கார்த்தி வேடத்தை இந்தியில் ஏற்கப்போகும் ஹீரோ யார் என்று பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தது. தற்போது ஹீரோ அஜய்தேவகன், தான்தான் கைதி ரீமேக்கில் நடிப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, 'யெஸ், கைதி இந்தி ரீமேக்கில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி திரைக்கு வரும்' என அவர் கூறினார்.