மீண்டும் ஒரு மரியாதை நடிகை திடீர் திருமணம்.. பாரதிராஜா நேரில் வாழ்த்து..
இயக்குநர் பாரதிராஜா தயாரித்து இயக்கி பிரதான வேடத்தில் நடித்துள்ள படம் மீண்டும் ஒரு மரியாதை. இப்படத்தில் புதுமுக கதாநாயகியாக நடித்தார் நட்சத்திரா முதலில் இப்படத்திற்கு ஓம் அதாவது ஓல்டடு மேன் எனப் பெயரிட்டிருந்தது. அந்த டைட்டில் இளைஞர்களைக் கவராது என்று டைட்டிலை மீண்டும் ஒரு மரியாதை என மாற்றினார் இயக்குநர். கடந்த வாரம் இப்படம் வெளியானது.
பாரதிராஜா அறிமுகப்படுத்தும் கதாநாயகி என்பதால் நட்சத்திரா திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் திடீரென்று நட்சத்திராவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது.
சேலம் ஆத்தூர் ஸ்ரீ அருள்ஜோதி குழுமத்தின் தலைவர் சேகர் (எ) அண்ணாமலை - அமுதவல்லி தம்பதியரின் மகள் நட்சத்திரா வுக்கும், பொள்ளாச்சி சிவானந்தம் ராதாமணி தம்பதியரின் மகனான எஸ். சத்யானந்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமணவிழாவில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், அமீர், இசை அமைப்பாளர் ரகுநந்தன், ஒளிப்பதிவாளர்கள் சாலை சகாதேவன், ராஜேஷ் யாதவ், பாரம்பரிய நடனக் கலைஞர் சண்முக சுந்தர், நடிகை சுஹாசினி, ஸ்டில்ஸ் யோகா மற்றும் உள்ளிட்ட திரளான திரைத்துறையினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.