விஜய்க்கு விஜய்சேதுபதி இறுக்கி அணைத்துக் கொடுத்த உம்மா.. மாஸ்டர் படப்பிடிப்பு அரங்கில் அத களம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கர்நாடகாவில் உள்ள சிறை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் தொழில் நுட்ப கலைஞர் ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது . அதில் விஜய்சேதுபதி தொழில் நுட்ப கலைஞருக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார். பின்னர் அருகில் விஜய்க்கும் எதிர்பார்க்காத விதமாக இறுக்கி அணைச்சு அவர் கன்னத்தில் உம்மா கொடுத்தார். அதைக்கண்டு அரங்கிலிருந்தவர்கள் கரவொலி அதிர வைத்தனர். விஜய்யை இழுத்துப்பிடித்து அவரது கன்னத்தில் விஜய்சேதுபதி முத்தம் கொடுக்கும் படத்தை மாஸ்டர் படக்குழு வெளியிட்டது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளது. ஏப்ரலில் படம் திரைக்கு வருகிறது.