அட்டகத்தி தினேஷ் நடிக்கும் அடெல்ட் காமெடி படம்.. பத்திரிகையாளர்கள் கேள்வியால் திணறல்..
அட்ட கத்தி தினேஷ் நடிக்கும் அடெல்ட் காமெடி படமாக மட்டுமல்லாமல் ஜாம்பி படமாகவும் உருவாகிறது 'பல்லு படாம பாத்துக்க'. இதில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார் . இப்படத்தை விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை.
அடெல்ட் காமெடி படத்தில் நடித்ததற்கு என்ன காரணம், பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் இதுபோன்ற படங்களில் நடிக்கிறீர்களா, இப்படி ஒரு ஆபாச தலைப்புள்ள படத்தில் நடித்ததற்கு என்ன காரணம் எனச் சரமாரியாக தினேஷிடம் கேட்டனர். கேள்வியால் திணறிப்போனாலும் சுதாரித்துக் கொண்டு பதில் அளித்தார். படத்தின் தலைப்பைக் கேட்டவுடனேயே நடிக்க முடியாது என்று தான் கூறினேன். இயக்குநரும் வேறு நடிகரை வைத்து படம் எடுக்கச் சென்று விட்டார். நல்ல கதையை மிஸ் செய்துவிட்டோமே என்று எண்ணினேன். ஏனென்றால் இப்படத்தில் வேறுவொரு முக்கிய சமுதாய கருத்து இருந்தது. அதனால் தான் மிஸ் செய்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன். பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படத்தின் டைட்டில் மாற்றினால் இப்படம் அடுத்த கட்டத்துக்குச் செல்லாது என்பது புரிந்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்போதைக்கு இதைத்தான் சொல்லமுடியும் படம் பார்த்துவிட்டு நீங்களே. முடிவு செய்யுங்கள்'என்றார் தினேஷ்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படம் அடெல்ட் காமெடி என்பதற்கு ஏற்ப கெட்ட வார்த்தைகள் ஏ ஜோக்குகள்தான் அதிகம் இருந்தது. இந்த காட்சிகளை மீறி அப்படியென்ன சமுதாய கருத்து இருக்குமோ என்ற முணுப்பு முணுப்புதான் அதிகம் இருந்தது.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது,'இதுவொரு அடல்ட் காமெடி படம் என்றாலும் முக்கியமான ஒரு சமுதாய கருத்தைச் சொல்கிறது. படத்தின் டைட்டிலை கேட்டவுடன் தினேஷ் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பிறகு வேறு ஹீரோ வைத்துப் படப்பிடிப்பு நடத்தினோம். அது சரியாக வரவில்லை மீண்டும் தினேஷை அணுகினோம். தணிக்கையில் இப்படத்தில் இடம் பெற்ற கெட்டவார்த்தைகளைக் கட் செய்யச் சொன்னதுடன் சில காட்சிகளுக்கும் கட் கொடுத்து ஏ சான்றிதழ் வழங்கினார்கள்' என்றார்.