பிரபுவைப் படிக்கவைக்கும் மகன்.. மதுபாலா தவிப்பு...

தலைப்பைப் படித்தவுடன் இந்த வயதில் பிரபு காலேஜிக்கு போகிறாரா என்று யோசிக்க வேண்டாம். இது அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் கதை. இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு.

பாஞ்சாலங்குறிச்சி படத்திற்கு பின் 23 வருடங்கள் கழித்து பிரபு க்கு ஜோடியாக இப்படத்தில் மதுபாலா நடிக்கிறார். இவர்களுடன் இளம் ஜோடியாக ராகுல் விஜய், பிரிய லட்லமணி நடிக்கின்றனர். மேலும் நாசர், சாம்ஸ் நடிக்கின்றனர். தந்தைக்கும் மகனுக்கும் இடையே கல்லூரியில் படிப்பதில் மோதல் ஏற்படுகிறது. இதனால் தந்தை பிரபுவை மகனே கல்லூரியில் சேர்த்து விடுகிறார். கணவர் பிரபுவுக்கும் மகன் ராகுலுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் இவர்களுக்குள் இந்தப்போட்டி ஏற்படக் காரணம் என்ன என்பதே கதை. படம் பற்றி பிரபு கூறியது : பாஞ்சாலங்குறிச்சி படத்தில் எனக்கு ஜோடியாக நடித்த. மதுபாலா 23 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். எந்த வயதிலும் கல்வி கற்க முடியும் என்ற கருவை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஹரி இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் நன்றாக வந்திருக்கிறது என்றார் பிரபு. இம்மாதம் 6ம் தேதி படம் வெளியாகிறது.

More News >>