பிரதமருக்குக் கோரிக்கை.. நோ சார் ஹேஸ்டேக்.. தேசிய அளவில் டிரண்டிங்

பிரதமர் மோடி சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கும், “நோ சார்” என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். பெரும்பாலான தகவல்களை டிவிட்டர், பேஸ்புக் மூலமாக உடனுக்குடன் பதிவிடுவார். இந்நிலையில், மோடி நேற்றிரவு தனது டிவிட்டர் பக்கத்தில்,பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களிலிருந்து விலகிக் கொள்ளலாமா? என்று கடந்த ஞாயிறன்று எண்ணிக் கொண்டிருந்தேன். விரைவில் உங்களிடம் சொல்கிறேன் என்று பதிவிட்டார். இதற்கு மோடி ஆதரவாளர்கள் மிகவும் கவலையாக ரீட்விட் போட்டனர். நீங்கள்தான் வழிகாட்டி, நீங்கள் விலகக் கூடாது என்று பதிவிட்டனர். அதே சமயம், மோடி எதிர்ப்பாளர்கள், இதுதான் நீங்க எடுத்த முதல் நல்ல முடிவு என்ற ரீதியில் பதிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, மோடி ஆதரவாளர்கள் இன்று நோ சார் என்று ஹேஸ்டேக் போட்டு, அவரை சமூக ஊடகங்களிலிருந்து விலகக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி ஏன் இப்படிச் செய்தார் என்றும் பல்வேறு யூகங்கள் வெளியாகியுள்ளது. சிஏஏ போராட்டங்கள், டெல்லி கலவரங்களில் 46 பேர் வரை உயிரிழந்தது, அதற்கு அமித்ஷாவை பதவி விலகச் சொல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது போன்ற விஷயங்களைத் திசைதிருப்புவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

More News >>