முதலில் எதிர்த்த இந்தியா இப்போது ஐபிஎல் போட்டியிலும் பயன்படுத்துகிறது

ஐபிஎல் போட்டிகளிலும் 4ஆவது நடுவர் என அழைக்கப்படும் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் போட்டி நடுவர்கள் அளிக்கும் முடிவு எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு டி.ஆர்.எஸ். [Decision Review System] முறை என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம், நடுவர்களின் தனிக்காட்டு ராஜ்ஜியம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது என்றே கூறலாம்.

இந்த டி.ஆர்.எஸ் முறை (4-வது நடுவர்) எங்களுக்கு நம்பிக்கை இல்லை என பிசிசிஐ துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் டி.ஆர்.எஸ் விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் விதி பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளிலும் டி.ஆர்.எஸ் பயன்படுத்திக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் 4-வது நடுவராக டி.ஆர்.எஸ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் 11-வது சீசன் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>