அனுஷ்காவை மணக்கப்போகும் இயக்குநர் யார் தெரியுமா? கோலிவுட்டில் பரபரக்கும் கிசுகிசு...
சிங்கம், வானம், தாண்டவம், தெய்வதிருமகள், சகுனி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி, ருத்ரம்மாதேவி, அருந்ததி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவரும், நடிகர் பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசு பரவிய நிலையில் இருவரும் அதனை மறுத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அனுஷ்கா திருமண முடிவை எனது பெற்றோரிடம் விட்டிருக்கிறேன். அவர்கள் யாரைச் சொல்கிறார்களோ அவரை மணப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அனுஷ்கா, தெலுங்கு பட இயக்குநர் ஒருவரைத் திருமணம் செய்யவிருப்பதாகவும் அந்த இயக்குநர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விவாகரத்து செய்தவர் என்றும் கூறப்படுகிறது. அனுஷ்காவை மணக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் வேறுயாருமல்ல டோலிவுட் பிரபல இயக்குநர் ராகவேந்திரராவ் மகன் பிரகாஷ் கோவெல்முடி என்று கூறப்படுகிறது. மேலும் அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை l பிரகாஷ் கோவெல்முடி தான் இயக்கினார். இவர் இயக்கிய இஞ்சி இடுப்பழகி படத்திற்காகத்தான் அனுஷ்கா 100 கிலோ வெயிட் போட்டார். பின்னர் எடை குறைக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு ஓரளவு மட்டுமே எடை குறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் பற்றி கோலிவுட்டில் கிசுகிசுவாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதுவரை அனுஷ்கா தரப்பிலோ, இயக்குநர் தரப்பிலோ இதுபற்றி யாரும் உறுதி செய்யவில்லை. மறுக்கவும் இல்லை.