டிக் டாக் அடிமையாகும் நடிகை.. தான் ஆடிய பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடுகிறார்..
கமல், ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் சிம்ரன் தற்போது குணசித்ரம், வில்லி என மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார்.
இணைய தள டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வந்த சிம்ரன் சமீபத்தில் டிக் டாக்கில் இணைந்தார். இணைந்ததுமுதல் அதற்கு அடிமையானதுபோல் தினம் தினம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிம்ரன்னுக்கு நடனம் ஆடுவதென்றால் அல்வா சாப்பிடுவதுபோல் இனிப்பான விஷயம். படங்களிலும் அவரது நடனம் பிரபலம். டிக்டாக்கிலும் அவர் நடனம்தான் அதிகம் ஆடிக்கொண்டிருக்கிறார். விஜய்யுடன் யூத் படத்தில் சிம்ரன் ஆடிய, 'ஆள் தோட்ட பூபதி..' பாடலுக்கு இளைஞர் ஒருவருடன் நடனம் ஆடி பதிவிட்டிருப்பதுடன் அந்த இளைஞருக்குக் கடைசியாகக் கன்னத்தில் ஒரு பளார் அறையும் தருகிறார். அதேபோல் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய்யுடன் பாடிய இன்னிசை பாடிவரும் இளம் பாட்டுக்கு உருவமில்லை பாடலையும் டிக் டாக்கில் பதிவிட்டிருக்கிறார் சிம்ரன். அதேபோல், அஜீத்துடன் நடித்த வாலி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கும் நடனம் ஆடி அதனை டிக் டாக்கில் வெளியிட்டிருக்கிறார். வர வர சிம்ரனின் பொழுதுபோக்கு டிக் டாக் என்றாகிவிட்டதால் அவர் மெல்ல மெல்ல டிக்டாக் செயலிக்கு அடிமையாகி வருகிறார் என்று ஒரு ரசிகர் மெசேஜ் பதிவிட்டிருக்கிறார்.