நக்கலடித்தவர் மீது ரித்திவிகா திடீர் கோபம்.. மூடிட்டு போடா புண்ணாக்கு...

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் ரித்விகா. மெட்ராஸ், அழகு குட்டி செல்லம், ஒரு நாள் கூத்து, இருமுகன், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் இன்ஸ்டாகிராமில் இணைந்து அவ்வப்போது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் லைக் கொடுத்துப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குசும்புத்தன ரசிகர் ஒருவர், 'ஐயோ பாவம் பட வாய்ப்பே இல்லாம வெட்டியா இருக்காங்க' என்று கிண்டல் செய்து மெசேஜ் பதிவிட்டார். அதைக் கண்டு கோபம் அடைந்த ரித்விகா, 'மூடிட்டு போடா புண்ணாக்கு..' என்று காட்டமாகப் பதில் அளித்தார்.

ரித்விகாவை பொறுத்தவரை தற்போது எம்ஜிஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

More News >>