அசல் கேரள பெண்ணாக மாறிய கீர்த்தி சுரேஷ்..
மோகன்லால், பிரபு, இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சிறைச்சாலை. இப்படம் மலையாளத்தில் காலாபானி என்ற பெயரில் உருவானது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. அப்படத்திற்கு மலையாளத்தில் மரைக்கார் அரவிபிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் i பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இதில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள் .
திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார் , எம்.எஸ். ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .ரோனி நபேல் இசையமைக்கிறார் . வரும் மார்ச் 26 ஆம் தேதி தமிழகமெங்கும் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக வெளியிடுகிறார் . இப்படம் பற்றி அவர் கூறும்போது,' சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான இந்த கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களைப் பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.
இப்படத்திற்காகக் கீர்த்தி சுரேஷ் கேரளா பாணியில் முண்டு கட்டி அசல் மலையாள தேசத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார். அப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன.