25 கிலோ எடை குறைக்கும் விஜய் சேதுபதி.. பாலிவுட் படத்துக்காக புதிய முயற்சி
விஜய்சேதுபதி தமிழில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தாலும் அவ்வப்போது வில்லன் வேடங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார். சமீபத்தில் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த ஆண்டில் இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருது உள்பட 6 ஆஸ்கர் விருதினை வென்ற பாரசைட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் அமீர்கான். இப்படத்திற்கு லால் சிங் சத்தா எனபெயரிடப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். பாரசைட் படத்திற்காக அமீர்கான் 21 கிலோ எடை குறைத்திருக்கிறார். அதேபோல் விஜய்சேதுபதியும் 25 கிலோ எடை குறைக்க உள்ளாராம். இப்படத்தை வேகமாகப் படமாக்கி, வரும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.