விஜய்யிடம் டிப்ஸ் கேட்கும் ஹிருத்திக்.. என்னையா சாப்பிட்றாரு இந்த மனுஷன்..

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர். அவரது நடனத்தைக் காண ரசிகர்கள் கூட்டத்தைவிட ரசிகைகள் கூட்டம் அதிகம். தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசமான நடன அசைவைத் தந்து அசத்திவிடுவது ஹிருத்திக்கின் வழக்கம்.

சமீபத்தில் சென்னை வந்தார் ஹிருத்திக். அவரை மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் வரவேற்றதுடன் சூப்பராக ஒரு நடனம் ஆடும்படி கேட்டனர். அதை ஏற்று ஹிருத்திக் நடனம் ஆடி ரசிகர்களை குஷிபடுத்தினார். அவரிடம் தென்னிந்திய நடிகர்கள் யாருடைய நடனம் பிடிக்கும் என்றபோது விஜய்யின் நடனம் பிடிக்கும். அவர் நடனமும், அதில் உள்ள வேகமும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. நடனம் ஆடுவதற்கு முன் என்ன உணவு எடுத்துக்கொள்கிறார் என்ற டிப்ஸை அவரிடம் கேட்க எண்ணுகிறேன். மேலும் நடனம் ஆடுவதற்காகவே அவர் தனது உடற்கட்டை ஸ்லிம்மாக வைத்துக்கொண்டிருக்கிறார். அதற்கேற்ற உணவுக் கட்டுப்பாடும் மேற்கொண்டுகிறார் என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

More News >>