காவல்துறைக்கு ரூ.100 கோடியில் 2,271 புதிய வாகனங்கள்.. முதலமைச்சர் வழங்கினார்..

காவல்துறைக்குப் புதிதாக 2,271 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்தார்.

தமிழக காவல் துறையினருக்கு சுமார் ரூ.100 கோடி செலவில் 1,506 இரு சக்கர வாகனங்கள், 31 ஸ்கார்பியோ வண்டிகள், 510 பொலிரோ, 50 வேன், 100 மினிபஸ், 20 பஸ், 54 லாரி என மொத்தம் 2,271 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று(மார்ச்6) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதிய வாகனங்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதற்கு அடையாளமாக 41 வாகனங்களை மட்டும் முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விசுவநாதன் கலந்து கொண்டனர்.

More News >>