பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..
உசிலம்பட்டி அருகே மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவதை அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது. மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.
கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண் சிசுக்களைப் பாதுகாக்க வேண்டும்!இவ்வாறு கூறியுள்ளார்.