மீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்.. கர்ணன் முடித்தவுடன் ஜூட்..
நடிகர் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேக மாக நடந்து வருகிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கதையாக இது உருவாகிறது.
இப்படம் முடிந்ததும் அடுத்த தனுஷ் நடிக்கும் படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப் என இரண்டு இந்தி படங்களில் நடித்திருக்கும் தனுஷ் தற்போது அட்ராங்கி ரே என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இதில் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள். அட்ராங்கி ரே படத்தின் படப் பிடிப்பு வாரணாசியில் தொடங்கி உள்ளது. அக்ஷய் குமார், சாரா நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.விரைவில் தனுஷ் இப்படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். மதுரையிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.