1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பாஜக எம்.பி. மீது வழக்கு தொடர்ந்த பிரகாஷ் ராஜ்

சமூக வலைத்தளத்தில் அவதூறாக உள்நோக்கத்தோடு விமர்சித்த பாஜக எம்பி மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சங்பரிவார் கும்பலை சேர்ந்த வலதுசாரி தீவிரவாதிகள் கல்புர்க்கியை தொடர்ந்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையை பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களும் கொண்டாடினர். இதனை நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து சங்பரிவார் அமைப்பினர் திட்டமிட்டு தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜை கடுமையாக தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். இவர்களோடு இணைந்து மைசூர் தொகுதியின் நடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா தனது டூவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு பாஜக எம்பிக்கு பிரகாஷ்ராஜ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் பாஜக எம்பி பதிலளிக்கவில்லை. இந்நிலையில் தன்னை அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்பி எனக்கு நஷ்ட ஈடாக ரூ. 1 வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

More News >>