விஜய்யின் குட்டி ஸ்டோரி பாட்டு டிக் டாக் சாதனை.. அனிருத் வெளியிட்ட வீடியோ..

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 100 நாட்களுக்கும் மேலாக நடந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்திலிருந்து விஜய் பாடிய குட்டி ஸ்டோரி வெளியாகி நெட்டிலும், யூ டியூபிலும் வைரலானது. ஆங்கிலம், தமிழ் கலந்து தங்லிஷ் பாடலாக இதனை வித்தியாசமான பாணியில் அமைத்திருந்தார் அனிருத்.

குட்டி ஸ்டோரி பாடல் வீடியோவை டிக் டாக் ஆப்பில் அனிருத் வெளியிட்டார் . இந்த டிக் டாக் பாடலும் 200 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக புதிய வீடியோ ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளார் அனிருத்.

More News >>