விக்ரம் மகன் படத்துக்குப் பாலா அனுமதி தருவாரா... கைவிட்ட படம் ரிலீஸ் ஆகிறது?
விஜயதேவரகொண்டா தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் மொழிமாற்றம் செய்யத் திட்டமிட்டபோது அப்படத்தைப் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிப்பதாக முடிவானது. வர்மா என்ற பெயரில் படம் உருவானது. ஆனால் அப்படம் திருப்தியாக இல்லை என்று தயாரிப்பாளர் ரிலீஸ் செய்யாமல் அப்படியே முடக்கி விட்டு மீண்டும் வேறு இயக்குநரை வைத்து ஆதித்திய வர்மா பெயரில் அதேபடம் ரீமேக் செய்யப்பட்டது. அப்படம் வெளி யானது. ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றதுடன் துருவ் விக்ரம் நடிப்பு பாராட்டு பெற்றது.
இந்நிலையில் முடக்கி வைக்கப்பட்ட 'வர்மா' படத்தை ரிலீஸ் செய்யத் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது. இதற்காக இப்படம் சிங்கப்பூரில் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறதாம்.. அதற்கான சான்றிதழ் நெட்டில் வெளியானபோது பலரும் ஷாக் ஆகினர். இப்படத்தை டிவியில் வெளியிடுவதா? தியேட்டரில் வெளியிடுவதா அல்லது டிஜிட்டல் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதா என்பதுபற்றி ஆலோசனை நடந்து வருகிறது. படத்தை வெளியிட பாலா தரப்பிலிருந்து ஆட்சேபனை வந்துவிடக்கூடாது என்பதால் அவரை சமாதானம் செய்யும் முயற்சியைப் படத் தரப்புமேற் கொண்டிருக்கிறதாம்.