நடிகை கார் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதர்கள்.. காயமின்றி உயிர் தப்பினார்..
பிலிபைன்ஸ் நாட்டில் மெட்ரோ மணிலா பகுதியில் ஹாலிவுட் நடிகை மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஒன் கிரேட் லவ், லவ் தை உமன், தி கோஸ்ட் பிரைட் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை கிம் ச்யூ. சில தினங்களுக்கு முன் இவர் காலை 6 மணி அளவில் தனது காரில் படுத்தபடி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மர்ம மனிதர்கள் சிலர் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக நடிகை உயிர் தப்பினார். இதுபற்றி நடிகை கூறும்போது,'காரில் சென்றபோது எங்களைத் துப்பாக்கியால் சுட்டது யார் என்பது தெரியவில்லை. யாரையோ தாக்குவதற்கு பதிலாக எங்கள் மீது தவறாகத் தாக்குதல் நடந்திருப்பதாகத் தெரிகிறது. காலை 6 மணிக்கு காரில் படுத்தபடி நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது சுமார் 8 முறை என் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ச்சியும், பயமும் அடைந்து என்ன நடக்கிறது என்று டிரைவரிடம் கேட்டேன். காரில் நான் படுத்திருந்த இடத்திற்குத் தலைக்கு மேல் இருந்த வின்ஷீல்டு கண்ணாடி மீது குண்டுகள் பாய்ந்து தெறித்தன' என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தரப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், துப்பாக்கியால் சுட்டது யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.