நயன்தாரா படத்தை வெளியிட்ட விக்னேஷ்சிவன்.. மகளிர் தினத்தில் மகிழ்ச்சி சூழல்...

நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் கடைசியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். நயன்தாராவைக் காதலித்து வரும் விக்னேஷ் சிவன், அவர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார். மகளி்ர் தினத்தில் நயன்தாராவின் அசத்தலான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஒரு மெசேஜ் பகிர்ந்தார்.

அதில்,'ஒவ்வொரு நாளும் மகளிர் தினம்தான். உங்களைச் சுற்றியுள்ள மகளிரை நேசியுங் கள், அவர்களை ஆதரியுங்கள். அவருக்குரிய மரியாதை தந்து, அவர்கள் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தகுந்த மரியாதையுடனும், அன்புடனும் நடத்தப் படுகிறார்கள் என்பதைக் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். பெண்கள் இல்லாமல் நாம் எந்த பணியையும் இந்த உலகில் செய்ய முடியாது. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். பாசிடிவான, மகிழ்ச்சியான சூழலை நோக்கிச் செல்வோம் மகளிர் தின வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>