டைரக்டராகும் விஜய் பட நடிகை காவேரி.. சரத்குமார், முரளி தங்கையாக நடித்தவர்
விக்ரமுடன் காசி, விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு படங்களில் நடித்திருப்பதுடன் சரத்குமார், முரளி ஆகியோருக்கு சமுத்திரம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்திருந்தார்.
தவிர மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் காவேரி. கடைசியாகத் தமிழில் விஜய்சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்திருந்தார். காவேரி மலையாள மொழிப் படங்களில் கல்யாணி என்ற பெயரில் நடித்திருக்கிறார். இந்நிலையில் காவேரி புதிய அவதாரம் எடுக்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுக்கிறார்.
இதுபற்றிய அறிவிப்பை டைரக்டர் கவுதம்மேனன் டிவிட்டர் பக்கத்தில்,'நம்பர் ஒன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கே2கே ப்ரொடக்ஷன் தயாரிக்க சேத்தன் சீனு நடிக்கிறார்' என தெரிவித்திருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உளவியல் திரில்லர் காதல் கதையாக உருவாகிறது எனப் பட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.