இந்தியர்களை வெளியேற்றி அமெரிக்கர்களைச் சேர்க்கும் காக்னிசென்ட்!

காக்னிசென்ட் ஐடி நிறுவனம் தங்கள் இந்தியப் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

'அமெரிக்காவிலேயே இனி ஐ.டி பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்' என அதிபர் ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே உத்தரவிட்டிருந்தார். இது இந்திய ஐ.டி நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஐடி நிறுவனங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களின் ஐடி பணியாளர்கள் கொத்தாக நீக்கப்பட்டு வருகின்றனர். காக்னிசென்ட், வெரிசான், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

இந்த அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து ஐடி ஊழியர்கள் நகரம் வாரியாக எதிர்ப்புகளிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது காக்னிசென்ட் நிறுவனம் புதியதொரு நியமத்தை நாசூக்காக நிகழ்த்தி வருகிறது. அதாவது காக்னிசென்ட் நிறுவனத்துக்கான ஊழியர்களை இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுப்பதை விடுத்து அமெரிக்காவில் அதுவும் அமெரிக்கர்களயே தேர்ந்தெடுக்க உள்ளது. இது தொடர்பாக இதுவரையில் 8,000 இந்தியர்களை பணிநீக்கம் செய்துள்ளது காக்னிசென்ட்.

மேலும், அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பல ஆண்டுகளாகப் பயனளித்து வந்த ஹெச்1பி விசா நடைமுறைகளிலும் கட்டுப்பாடுகள் அளவுக்கதிகமாக விதிக்கப்பட்டிருப்பதால் இந்திய ஐடி ஊழியர்களின் எதிர்காலம் அமெரிக்காவில் மட்டுமின்றி இந்தியாவிலும் கேள்விக்குறியாகி உள்ளது.

More News >>