அஜீத்தை மவுனம் கலைக்கச் சொல்லும் நடிகை.. என்ன காரணம் தெரியுமா?
விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் நெட்டில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. அதேசமயம் தல ரசிகர்கள் சிலர் நடிகை கஸ்தூரியிடமும் மோதுகின்றனர். அவரைப் பற்றித் தகாத வார்த்தைகள் பேசி மெசேஜ் பதிவிடுகின்றனர். சில சமயம் கஸ்தூரி அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கிறார். ஆனால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அஜித் ரசிகர்கள் கஸ்தூரியை விமர்சிக்கின்றனர். அந்த மோதல் தற்போது வெடித்திருக்கிறது.
இதையடுத்து இணைய தளம் வாயிலாக அஜீத்துக்கே நேரடி யாக நடிகை கஸ்தூரி இதுகுறித்து புகார் செய்துள்ளார். அதில்,'உங்கள் மவுனத்தால் ரசிகர்கள் என்னை இப்படி கலாட்டா செய்து வருகின்றனர்' என அதில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரியின் கடிதத்துக்கு அஜீத் என்ன பதில் தரப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.