துப்பறிவாளன்2 இயக்குநர் ஆனார் விஷால்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம் துப்பறிவாளன். இப்படம் வெற்றிபெற்றதையடுத்து 2ம் பாகம் உருவாக்க முடிவானது. மீண்டும் விஷால், மிஷ்கின் இணைந்தனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்க ஒப்புக்கொண்டார். முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா 2ம் பாகத்திலும் நடிக்கிறார்.
துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. விஷால் நடித்த காட்சிகளை மிஷ்கின் இயக்கினார். அடுத்தகட்ட படப் பிடிப்பு தொடங்கும் நிலையில் மிஷ்கின், விஷாலுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. படத்திற்கான பட்ஜெட் மற்றும் தனது சம்பளத்தை அதிகரித்துக் கேட்டாராம் மிஷ்கின். அதை விஷால் ஏற்கவில்லை. இந்நிலையில்தான் படத்திலிருந்துதான் வெளியேறுவேன் என்று மிஷ்கின் கூற அதனை விஷாலும் ஏற்றுக்கொண்டாராம் தற்போது துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தை இயக்கும் பொறுப்பை விஷாலே ஏற்றிருக்கிறார், எனப் படத் தரப்பினர் அறிவித்துள்ளனர். இளையராஜா இசை அமைக்கிறார்.