வாணி போஜனை அட்ஜெஸ்ட் பண்ணச் சொன்னது யார்? அவரே அளித்த பதில்..
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலை பார்க்காதவர்கள் கிடையாது. அதில் நடித்த வாணி போஜனை யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது சினிமாவில் நடிக்க வந்த்திருக்கிறார்.
ஓ மை கடவுளே என்ற படத்தில் அசோக் செல்வனின் காதலி யாக நடித்திருந்தார். மேலும் சில படங்களில் நடிக்கப் பேச்சு நடந்தது. ஓ மை கடவுளே படம் இருவித விமர்சனங்கள் பெற்றாலும் வாணிபோஜன் தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். சினிமா துறையில் மீ டூ விவகாரம் பெரிதாகப் பேசப்படுகிறது. அதுபோல் சம்பவத்தை வாணி போஜன் எதிர்கொண்டிருக்கிறாரா என்று கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறும்போது, 'சினிமாவில் மீ டூ விவகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு நேரடியாக அப்படி நடந்ததா என்றால் இல்லை. ஆனால் என் மேனேஜரிடம் அட்ஜெஸ்ட் செய் வாரா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு மேனேஜரே பதில் தந்து விட்டார். அட்ஜெஸ்ட் பண்ண வேண்டும் என்ற நிலை வந்தால் மீண்டும் டிவிக்கே சென்று விடுவேன் 'என்றார் வாணி போஜன்.